ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற இளைஞர் கைது

தஞ்சாவூரில், 12 ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற இளைஞரை, கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 25 கிராம் நகையை மீட்டனர்.

தஞ்சாவூரில், 12 ஐம்பொன் சிலைகளை திருட முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த 25 கிராம் நகையை மீட்டனர்.

தஞ்சாவூர், பூக்குளம் பகுதியில், சத்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான வேதவள்ளி சமேத நாகநாதர் கோவில் உள்ளது. இங்கு தினேஷ் என்பவர் அர்ச்சராக உள்ளார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி கோவிலை தினேஷ் திறந்த போது, ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அறைகள் திறக்கப்பட்டு, 12 சிலைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைத்தார். இது குறித்து தினேஷ், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் ஆய்வில், கோவிலின் பின்பகுதியில் உள்ள குளத்தின் கரையில், சாமி சிலைகள் சாக்குமூட்டையில் கட்டி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர், தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த ஆனந்த் (27), என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிகாலை நேரத்தில் கோவிலில் இருந்த சிலைகள் மற்றும் சாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க மற்றும் 16 கிராம் வெள்ளி நகைகளை திருடியுள்ளார். பின்னர், திருடிய பொருட்களை எடுத்து வரும் போது, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், நகைகளை மட்டும் எடுத்து கொண்டு, சாமி சிலைகளை யாருக்கும் தெரியாமல் இருக்க குளத்தின் கரையில் வைத்துவிட்டு இரவில் வந்து எடுத்து கொள்ள ஆனந்த் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்திடம் இருந்து நகைகளை மீட்டு, அவரை கைது செய்தனர்.

Tags

Next Story