கஞ்சா வழக்கில் இளம்பெண் கைது - மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
கைது
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடன்குடி வைத்தியலிங்க புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து அவர் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அந்த பையில் இருந்த 11 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த விசராணையில், அந்த பெண் உடன்குடி தேரியூரைச் சேர்ந்த ஜெயபாண்டி மகள் சத்யா (35) என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் அவர் கஞ்சா விற்று வந்ததும், அவருக்கு உடந்தையாக கூட்டாளிகள் 4பேர் இருந்ததும், போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த மேலும் 4பேரை தேடி வருகின்றனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட சத்யா நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.