வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கைது

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்களம் பகுதியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் (வயது 30)பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து மோகன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags

Next Story