போக்சோ வழக்கில் வாலிபர் கைது
போக்சோவில் கைது
21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். கோயம்புத்தூர் உக்கடத்தைச் சேர்ந்த தங்கராஜ்(28) என்பவரை போக்சோ வழக்கில் கீரனூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி தங்கராஜ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story