பக்கத்து வீட்டு முதியவருக்கு வெட்டு. ஒருவர் மீது வழக்கு

பக்கத்து வீட்டு முதியவருக்கு வெட்டு. ஒருவர் மீது வழக்கு
வழக்கு பதிவு 
கன்னியாகுமரி மாவட்டம், செங்கட்டிவிளை பகுதியில் போதையில் ஏற்பட்ட தகராற்றால் முதியவரை வெட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி செங்கட்டி விளை என்ற இடத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (71). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆமோஸ் மகன் அனில்குமார் (39). இவரும் கூலித் தொழிலாளிகள். அனில்குமார் மது குடித்துவிட்டு, அடிக்கடி வர்க்கீசிடம் தகராறு செய்வது வழக்கமாம்.

இந்த நிலையில் சம்பவ தினம் இரவு சாப்பிட்டு விட்டு வர்கீஸ் வீட்டின் வெளியே வந்துள்ளார். அப்போது அனில்குமார் போதையில் கெட்ட வார்த்தைகள் பேசி, கையில் வைத்திருந்த வெட்டுக் கத்தியால் வர்கீசை வெட்டியுள்ளார். இதில் அவருக்கு தலை, உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த வர்கீஸ் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story