குமரி : இரவில் காதலனுடன் சிக்கிய மாணவிக்கு சில்மிஷம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே சொத்த விளை கடற்கரை குமரியின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கடற்கரையொட்டி தென்னந்தோப்புகளும் சவுக்கு மரக் காடுகளும் உள்ளன . இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி காதல் ஜோடிகள் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கடற்கரைக்கு வந்து உல்லாசமாக இருப்பர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தான் காதலித்து வரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது மாணவியுடன் இரவு சொத்தவளை கடற்கரையில் பைக்கில் சென்றுள்ளார்.
இரவு கடற்கரையில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த லியோராஜ் (34), சகாய சீமோலியன் (34)ஆகிய இரண்டு பேர் அங்கு வந்து காதலன் கண் முன்னாடியே மாணவியிடம் அத்துமீறி உள்ளனர். இதன் பின்னர் பணம் தந்தால் இருவரையும் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர். உடனடியாக காதலன் அந்த வாலிபர்களுக்கு கூகுள் செயலி மூலம் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்ற பிறகும் தொடர்ந்து அந்த மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக காதலன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் தெரிவித்தார். பொதுமக்கள் அங்கு திரண்டு வருவதற்குள் இருவரும் தப்பி சென்று விட்டனர். இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சகாய சியோலியன்., லியோராஜ் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.