மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை தாக்கிய தம்பி – அண்ணன் பலி

மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை தாக்கிய தம்பி – அண்ணன் பலி
அண்ணனை தாக்கிய தம்பி
திருப்பத்தூர் அருகே எம்ஜிஆர் நகர் பகுதியில் தாயை மதுபோதையில் தாக்கிய அண்ணனை தடுக்கச் சென்ற அண்ணனை தம்பி தாக்கியதில் அண்ணன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலோரி முத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இதில் முதல் மகன் சந்தோஷ் (30) மற்றும் இரண்டாவது மகன் சஞ்சய் வயது (24) ஆகும். முதல் மகன் சந்தோஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தாயான மலரை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் இதனை தடுக்க வந்த சஞ்சய் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து சந்தோஷ் தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இவரை மீட்டு குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயமடைந்துள்ளதால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த சந்தோஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை வழக்கு பதிவு சஞ்சயை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story