இளைஞர் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

சீவல் கரடு பகுதியில் தனியார் வங்கியில் கலெக்சன் வேலை செய்து வந்த இளைஞர் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமம் குன்னூத்துப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 51 வயதானவர் பெரியகருப்பன். அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றார். இவரது மகன் 24 வயதான இளைஞர் சூரியகுமார்.வத்தலகுண்டு ஈசாப் பேங்கில் கேஸ் கலெக்சன் மகளிர் குழுவில் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார் .இளைஞர் சூரியகுமார் உடன் குபேந்திரன் என்பவரும் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார் . குபேந்திரன் என்பவர் வசூல் செய்யும் பணத்தில் குளறுபடி செய்யவே குபேந்திரன் என்பவரை ஈசாப் பேங்க் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இருந்த போதிலும் சூரியகுமார் குபேந்திரனுடன் சேர்ந்து பணத்தை கலக்சன் செய்து பேங்கில் கட்டி வந்துள்ளனர் .இதனால் சூரியகுமார் என்பவருக்கு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இதனை சூரியகுமார் என்பவரது தந்தை பெரியகருப்பன் தெரிந்து கொண்டு சூரியகுமார் வேலை பார்க்கும் ஈசாப் பேங்கிற்கு சென்று கிளை மேலாளர் மாணிக்கம் என்பவர் இடம் விபரம் கேட்டறிந்துள்ளார் .அப்போது சூரியகுமார் பெயரில் இரண்டு குழுக்களில் வசூல் செய்த பணம் 30000 சூரியகுமார் செலுத்த இருந்து வருவதாகவும் அதனை சூரியகுமார் வேண்டும் என கிளை மேலாளர் தெரிவித்துள்ளார் . இந்த தகவலை தெரிந்து கொண்ட பெரியகருப்பன் அவரது மகன் சூரியகுமார் என்பவரிடம் பணத்தை விரைவில் கட்டி விடுமாறு கூறியுள்ளார் . இந்நிலையில் இளைஞர் சூரியகுமார் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவரது உடம்பில் சிறுசிறு காயங்களுடனும் சட்டை கிழிந்த நிலையிலும் இருந்துள்ளது .பெரியகருப்பன் அவரது மகனிடம் என்ன என்று கேட்டதற்கு ஒன்றுமில்லை என சொல்லி வந்துள்ளார் இளைஞர் சூரியகுமார் . 23.1.24 ம் தேதி வழக்கம் போல் இளைஞர் சூரியகுமார் வேலைக்கு சென்றுள்ளார் .பின்பு அன்று காலை 11 மணியளவில் சூரியகுமார் வேலை பார்க்கும் வங்கி மேலாளர் பெரியகருப்பன் என்பவருக்கு போன் செய்து ஒரு சென்டரில் மட்டும் உங்களது மகன் வேலை செய்து போட்டோ அனுப்பி உள்ளார் என்றும் அதன்பின் போன் செய்தால் போன எடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர் . இதுகுறித்து பெரியகருப்பன் என்பவர் குபேந்திரனிடம் விசாரித்த போது ஈசாப் கம்பெனியில் ஆடிட்டிங் நடப்பதாகவும் சூரியகுமார் கம்பெனிக்கு செலுத்த வேண்டிய பணத்தை கட்டும் நிர்பந்தத்தில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார் . அதன் பின் பெரியகருப்பன் அவரது மகன் சூரியகுமார் என்பவரை பல்வேறு இடங்களில் தேடியும் அக்கம் பக்கம் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காததால் 24.1.24 ம் தேதி காலை 11 மணி அளவில் விருவீடு காவல் நிலையம் சென்று காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின் பேரில் விருவீடு காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன சூரியகுமாரை தேடி வந்தனர். 24.1.24 ம் தேதி மதியம் பெரியகருப்பன் என்பவரது மகன் இளைஞர் சூரியகுமார் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளத்துப்பட்டிக்கு அருகில் உள்ள சீவல் கரடு பகுதியில் தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் தெரிந்து பெரியகருப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு இறந்து போனது சூரியகுமார் என்பதை உறுதி செய்துள்ளனர் . இளைஞர் சூரியகுமார் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சூரியகுமாரின் தந்தை பெரிய கருப்பன் தேவதானப்பட்டி காவல் துறையினருக்கு கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி காவல் துறையினர் 24.1.24 ம் தேதி இரவு 9 மணி அளவில் இது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story