டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய இளைஞர்கள்.

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய இளைஞர்கள்.

 அம்பேத்கர்  பிறந்தநாள் விழா 

லால்குடி அருகே ராமநாதபுரத்தில் டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர்கள் அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி கொண்டாடினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ராமநாதபுரத்தில் உள்ள இளைஞர்கள் சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் 133 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அவரது திருஉருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் ஐயப்பன், தர்சன் அழகுதுரை, பாக்கியராஜ்,முத்தழகு, முத்து, வினோத்குமார், தங்கதுரை, லோகநாதன், சாமிநாதன், புதியவன், கலைமணி, ஆறுமுகம், பிச்சை, இளவரசன்,கண்ணன், கலைச்செல்வன்,ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story