வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கே,கரிசல்குளத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் சங்கிலிபாண்டி (23) இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக நேற்று இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் அறிந்த அய்யாபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை வாலிபர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story