மது அருந்துவதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

மது அருந்துவதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமம், தெற்கு காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் கார்த்திக் ராஜ் (26). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வருவாராம். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் மன வேதனையில் கார்த்திக் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story