பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
விக்னேஷ்,
குமாரபாளையத்தில் பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தியடிகள் தெருவில் பாட்டி வீட்டில் வசித்து வருபவர் விக்னேஷ், 26. திருப்பூர் பனியன் நிறுவன கூலி. சிறு வயதில் பெற்றோர் இருவரும் இறந்து விட்டதால், ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று காலை 06:00 மணியளவில் வீட்டில் ஹாலில் உள்ள விட்டத்தின் கொக்கியில் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டு இருப்பதாக, பாட்டி சொன்னதாக, திருச்செங்கோடு, குமாரமங்கலத்தில் உள்ள விக்னேஷ் அண்ணன் தனசேகரனுக்கு, உறவினர் ஒருவர் போன் மூலம் தகவல் சொல்லியுள்ளார். உடனே நேரில் வந்த தனசேகரன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து தம்பி விக்னேஷ் இறந்த விபரம் அறிந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விக்னேஷ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Next Story