அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை :
பைல் படம்
தூத்துக்குடியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் தவக்குமார் (23). இவர் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் அவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். ஆனால் பல தேர்வுகள் எழுதியும் அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் விஷம் மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story