வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியில் மதுவவிற்கு அடிமையான வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் முத்து நாடார் மகன் வினிஷ் குமார் (36) கார் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வினீஷ் குமாருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அனி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே வினிஷ் குமாரை அவரது உறவினர்கள் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்த வினிஷ்குமார் திங்கள் நகரில் உள்ள அவரது சகோதரி ஜமீலா என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு ஆகியும் வினிஷ் வீடு திரும்பவில்லை.

அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை இரணியல் தாழ்ந்த விளை என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளம் அருகில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதியினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வினிஷ்குமாரின் சகோதரர் ராஜகுமார் (55) என்பவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story