மது அருந்த பணம் தராததால் வாலிபர் தற்கொலை
தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்துார் அருகே மாடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதேவா(27).கூலி தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தார். இந்நிலையில் அவ்வப்போது பெற்றோரிடம் பணம் வாங்கி குடிக்க செல்வாராம். இந்நிலையில் திரும்பவும் பணம் கேட்கும் போது பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த பிரபுதேவா இரு நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கினார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவரது பெற்றோர், பிரபுதேவா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.