வாலிபர் தற்கொலை
தற்கொலை
தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவல் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(37). இவர் (மேள கலைஞர்). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் மயங்கி நிலையில் இருந்தார் இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story