இளைஞா் தற்கொலை
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் இசக்கிராஜ் (27). ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் உள்ள கறிக்கோழிக் கடையில் தொழிலாளியாக இருந்தாா். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில், தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராம். தனக்கு திருமணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த இசக்கிராஜ், பூச்சிகொல்லி மருந்தைக் குடித்து மயக்கமடைந்தாராம். அவா் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story