வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை 

தாழையாத்தம் அருகே செல்போன் வாங்கிக்கொடுக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தாழையாத்தம் கூடநகரம் ரோடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேலு. இவருக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் நவீன் (19). 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அவரை படிக்கச் சொல்லி பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் புதிய செல்போன் வாங்கித் தந்தால் படிப்பதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு புதிய செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் கீழே விழுந்து உடைந்துள்ளது. இந்தநிலையில் நவீனை பெற்றோர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது நவீன் மீண்டும் எனக்கு புதிய செல்போன் வாங்கித் தந்தால் தான் பாலிடெக் கல்லூரியில் சேருவேன் எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சிறிது நாள் கழித்து வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் நவீன் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதனை கண்ட பெற்றோர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story