ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை- வாலிபர் தற்கொலை
தற்கொலை செய்து கொண்டவர்
திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் ராமு, 38. இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் பழனிபேட்டை பகுதியில் போண்டா கடை நடத்தி வந்தார். இவர் மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடி வந்தார்.
தனியார் வங்கிகள் மற்றும் நண்பர், உறவினர்களிடம், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு ராமுவிடம் கேட்டு நெருக்கடி செய்தனர். இதனால் ராமுவின் உறவினர்கள், ராமுவை கண்டித்து அவரது மொபைல் போனை கீழே போட்டு உடைத்தனர்.
இதனால் மனமுடைந்த ராமு நேற்று அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் அரக்கோணம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி, ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.