கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை

கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை
ஆலங்குளத்தில் கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கடன் தொல்லையால் இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடன் தொல்லை காரணமாக இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அம்பாசமுத்திரம் திலகா் தெருவைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் ரகுராம் (30). இவா் தனியாா் வங்கிகளில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வந்தாா். இவருக்கு ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளியைச் சோ்ந்த சங்கீதா என்பவருடன் திருமணமாகி 3 வயது மகள் உள்ளாா். இந்நிலையில், உடையாம்புளி கிராமத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் வீடு கட்டினார்.

வீடு கட்டியதில் இவருக்கு அதிக கடன் ஏற்பட்டது. இந்நிலையில் ஆலங்குளம் அருகேயுள்ள காத்தபுரம் இசக்கி அம்மன் கோயில் அருகே வைத்து விஷம் குடித்துவிட்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள தாயாா் வீட்டுக்குச் சென்ற அவா் அங்கு மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story