தனிமையில் வசித்து வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

 தனிமையில் வசித்து வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம்,வேப்பங்காடு பகுதியில் தனியாக இருந்த இளைஞர் விரக்த்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அஜித் கிளாட்வின் (26). இவரது தாய் - தந்தையர் இறந்து விட்டனர். உறவினர் யாரும் இன்றி தனியே வசித்து வந்த அவர் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story