கடன் பிரச்சனையால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கடன் பிரச்சனையால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முறப்பநாடு அருகே கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது , தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள வசவப்பபுரம் பொன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் சுரேஷ் சூர்யா (22). இவர் அப்பகுதியில் டூவிலர் மெக்கானிக் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தொழிலில் சரியான வருமானம கிடைக்கவில்லையாம்.

இதனால் அவரால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story