திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருமணமாகாததால் இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி அருகே உள்ள ஏவூா் குடித்தெருவைச் சோ்ந்த ஆனந்தன் மகன் ஹானஸ்ட் ராஜ் (29). திருமணம் ஆகாததால் மதுபழக்கத்துக்கு அடிமையான அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில், முசிறி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.