பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை

தற்கொலை 

சேலம் மாவட்டம்,வெள்ளையூரில் பெற்றோர் திட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம், வீரகனூர் அருகே வெள்ளையூரை சேர்ந்த இளைஞர் கோவிந்தராஜ்(23). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திய நிலையில், ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் மே 2ம் தேதி தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(மே 5) உயிரிழந்தார். வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story