திருப்பூரில் திருமணம் செய்து பெண் ஏமாற்றியதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருப்பூரில் திருமணம் செய்து பெண் ஏமாற்றியதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்

வாலிபரை ஏமாற்றிய பெண்

திருப்பூரில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து பெண் ஏமாற்றியதாக எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் புகார் அளித்தார்.

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து 3 மாதங்களுக்கு மேல் வாழ்ந்த நிலையில் சந்தியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது சந்தோஷுக்கு தெரிய வந்தால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்தியா சந்தோசை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தன்னை ஏமாற்றியதாகவும் தன் திருமண செலவிற்காக 2 லட்சம் ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் வரை செலவு செய்தது மட்டுமல்லாமல் சந்தியாவிற்கும் பணம் கொடுத்ததாகவும் , இதனால் மணமுடைந்ததாக சந்தோஷ் கடந்த நவம்பர் மாதம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் இருதரப்பையும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சந்தியா 2 லட்ச ரூபாய் பணத்தை தந்து விடுவதாகவும் ஒரு லட்ச ரூபாயை உடனடியாக தந்துவிட்டு மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை மாதத் தவணையில் வழங்குவதாக தெரிவித்து இருவரும் சமரசம் செய்துள்ளனர். இதற்குப் பிறகு சந்தியா முப்பதாயிரம் மட்டும் கொடுத்ததாகவும் அதன் பின்னர் தான் வெளிநாடு செல்வதாக கூறி சென்று விட்ட நிலையில்,

தற்போது கடன் பெற்றவர்களிடம் பதில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் , உடனடியாக சந்தியாவை கண்டுபிடித்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என சந்தோஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

Tags

Next Story