தனியார் கல்லூரியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தனியார் கல்லூரியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 தோவாளையில் தனியார் கல்லூரியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தோவாளையில் தனியார் கல்லூரியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட கல்லூரியில் படிப்பை முடித்த மற்றும் பாதியில் நிறுத்திய மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை வழங்காமல் பணம் பேரம் பேசுவதாக மாணவர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு தனியார் பொறியியல் கல்லூரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags

Read MoreRead Less
Next Story