மருதுபாண்டியர் கல்லூரியில் இளைஞர் தினவிழா

மருதுபாண்டியர் கல்லூரியில் இளைஞர் தினவிழா
இளைஞர் தின விழா
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்விக் குழுமம் மற்றும் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடந்த தேசிய இளைஞ தின விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்விக் குழுமம் மற்றும் ராமகிருஷ்ண மடம் ஆகியன இணைந்து தேசிய இளைஞ தின விழாவை நேற்று நடத்தின. கல்லூரித் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மைசூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி மகாமேதானந்தா கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா பேசுகையில், இன்றைய இளைஞனே நாளைய தலைவன். பொறுப்பில் இருப்பவன் என்றும் தலைமைப் பண்புடன் திகழக்கூடியவன். நாட்டுக்காக வேலை செய்பவர், இவரால் ஈர்க்கப்படுவர். அறிவு, ஆற்றல் உடல், உள்ளம் இருப்பவன்தான் இளைஞன். உடலை உறுதி செய்து,ஊருக்கு உழைத்து, அறிவை ஆழமாக்கு என்று இளைஞர்களுக்கு உந்துசக்தியாய் இருப்பவர் சுவாட விவேகானந்தர் என்றார்.

கோவை பூ.சா.கோ. கலை- அறிவியல் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, கல்லூரி முதல்வர் மா.விஜயா வரவேற்றார். நிறைவில் தமிழ்த் துறை தலைவர் வீ.வெற்றிவேல் நன்றி கூறினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பி.உஷா, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமநாத ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

Tags

Next Story