கோவில் குளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
சடலம் மீட்பு
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா(36). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்ஜான் பேகம் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெயிண்டர் வேலை செய்து வந்த ஷேக் அப்துல்லா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஷேக் அப்துல்லாவை பல இடங்களில் தேடியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த சைக்கிள் கடந்த இரண்டு தினங்களாக முத்து மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே நின்றுள்ளது. இந்நிலையில் நேற்று தெப்பக்குளத்தில் ஆண் சடலம் நீரில் மிதப்பதாக நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பார்த்ததில் அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போன ஷேக் அப்துல்லா என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது உடலை போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தவறி விழுந்த உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story