கள்ளச் சந்தையில் மது விற்பனை போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை

ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன் (வயது 32) திருமணமாகவில்லை இராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பாரில் பார் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர் அந்த துரைச்சாமிபுரம் பகுதியில் மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்ப்பட்டோர் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர் . இதில் மதுபான விற்பனை குரூப்பிற்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது சரவணன் பார் ஊழியராக பணியாற்றுவதால் அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில் கடை அடைக்கும் பொழுது அதிகளவில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதில் எதிர் தரப்பினருக்கு மதுபாட்டில்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது . சரவணன் கள்ளச் சந்தையில் மது விற்று அதிக அளவில் வருவாய் ஈட்டுவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு தரப்பினால் ஆத்திரத்தில் சரவணனை மது மற்றும் கஞ்சா போதையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முதுகுடி பகுதியில் நேற்று இரவு சமுதாய பிரச்சனையில் வாலிபர் ஒருவரை கொலை செய்யும் முயற்சியில் வெட்டப்பட்டுள்ளார் இதுவும் கஞ்சா போதையில் நடந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் அதேபோல் இன்று அதி காலையில் முகநூல் பழக்கத்தில் வீட்டில் இருந்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் கொலை செய்ய முயற்சித்துள்ளார் இந்த மூன்று சம்பவங்களும் இராஜபாளையத்தில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

போதை மற்றும் கஞ்சா கலாச்சாரத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்று சம்பவம் நடப்பதற்கு முன்பு உளவுத்துறை உரிய தகவலை தெரிவித்து இருந்தால் கள்ளச் சந்தை மது விற்பனை கஞ்சா விற்பனையை தவிர்த்திருக்கலாம் இனிமேலாவது உளவுத்துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் முறையாக மாவட்ட காவல் துறை அலுவலகம் மற்றும் தமிழக அரசுக்கு முறையாக தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story