ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி
ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்வி பாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலி மகன் சலீம், 19; இவர், நேற்று சங்கராபுரத்திலிருந்த மல்லாபுரத்திற்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அன்பரசு என்பவர் ஓட்டினார். எஸ்.வி.பாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த சலீம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story