பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
X

கைது

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெகதீஷ் (33). இவர் நேற்று மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

குறுக்குச் சாலை அருகே வந்தபோது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த மதுரை பொன்மேனி நகரைச் சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story