சைக்கிளிங் சென்ற நபர் விபத்தில் பலி - கல்லூரி மாணவர் கைது

சைக்கிளிங் சென்ற நபர் விபத்தில் பலி - கல்லூரி மாணவர் கைது

விபத்தில் பலி 

தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சைக்கிளிங் சென்ற இளைஞர் கார் மோதி பலியான சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது‌ செய்யப்பட்டார்.

கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ராகுல்(22), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இன்று காலை தனது நண்பர்களுடன் கோடம்பாக்கத்தில் இருந்து அதிகாலையில் சைக்கிளிங் சென்றுள்ளார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் ராகுல் ஓட்டி சென்ற சைக்கிளின் மீது மோதியதில் பைபாசின் அருகே இருந்த பள்ளத்தில் கார் கவிழந்தது இதில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன ராகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ஆதித்யா(30), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் கல்லூரிக்கு செல்லும்போது விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவன் ஆதித்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் சைக்கிளிங் சென்றபோது கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதியதில் ஒருவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story