போளூர் அருகே விபத்து - வாலிபர் பலி
விபத்து
போளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 22) மோட்டார் சைக்கிளில், நண்பர் ராஜசேகருடன் (22) போளூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலையை நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.ராஜசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story