மின்கம்பம் சாய்ந்து வாலிபர் பலி
புதுச்சேரி மாநிலம் சஞ்சீவி நகர் பகுதியில் சார்ந்தவர் கந்தன் கூலி தொழிலாளி இவரது மகன் அவினாஷ் (20). இவர் தனது வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சிற்றம்பலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டக்கரை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பழமை வாய்ந்த பனைமரம் சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விழுந்தது.
இதில் மின் கம்பங்கள் சாய்ந்து விழ தொடங்கின இதில் அவ்வழியாக வந்த அவினாஷ் மேல் மின்கம்பம் விழுந்ததில் பலத்த காயமடைந்தார் உடனே அருகில் இருந்தவர்கள் அவினாஷயை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சாலை சென்ற வாலிபர் மீது மின் கம்பம் விழுந்து இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது