தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

கொத்தப்பாளையத்தில், குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் மகன் முகமது முஸ்தபா வயது 21. முகமது முஸ்தபாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து, டிசம்பர் 23ஆம் தேதி மாலை, அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள கொத்தபாளையம் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது முகமது முஸ்தபா எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அவரது தாயார் சபியா சுல்தானா வயது 46 என்பவர், இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர்க்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த முகமது முஸ்தபாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story