மது போதையில் வாலிபர் கீழே தவறி விழுந்து வாலிபர் பலி

மது போதையில் வாலிபர் கீழே தவறி விழுந்து வாலிபர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி 

மதுரவாயலில் மாடியில் மது போதையில் போன் பேசிக் கொண்டிருந்த வாலிபர் கீழே தவறி  விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரவாயல் ஸ்ரிலட்சுமி நகர் காந்தி தெருவில் வசிப்பவர் தினேஷ்குமார் (வயது 31). இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த நியைில் நண்பர்களுடன் சேர்ந்து மதுரவாயல் பகுதயில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியபடி தனியார் ஓட்டலில் ரூம் சர்வர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தங்கியிருக்கும் வீட்டின் மூன்றாவது மாடியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில் தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே 3 வது மாடியில் இருந்த தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.

உடன் தங்கி இருந்த நண்பர்கள் பைக் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அது தொடர்பாக நண்பர்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story