புதுகையில் இளைஞர் வெட்டி படுகொலை - மூன்று பேர் கைது!

புதுகையில் இளைஞர் வெட்டி படுகொலை

புதுகையில் இளைஞர் வெட்டி படுகொலை

புதுகையில் இளைஞர் வெட்டி படுகொலை
புதுக்கோட்டை நகரில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை நகரில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் 3 பேரை கைது செய்தனர். புதுக்கோட்டை அடப்பன் வயல் 6ஆம் வீதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் ஒச்சி கார்த்தி (25) வியாழக்கிழமைவெட்டிக் கொல்லப்பட்டார். இவரின் தங்கையை புதுக்கோட்டை மே 6ஆம் வீதி அரியமுத்து மகன் சீனிவாசன் (29) என்பவர் காதலித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் கார்த்தி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த சீனிவாசன், அடப்பன்வயல் 3ஆம் வீதி நாகராஜ் மகன் நெருப்பு தினேஷ் (25), பலூன் சொர்ணமூர்த்தி (24) ஆகிய 3 பேரையும் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மூவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story



