மக்கள் சேவையில் இளைஞர்கள் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

மக்கள் சேவையில் இளைஞர்கள் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

பாராட்டு சான்றிதழ் வழங்கல் 

மக்கள் சேவையில் இளைஞர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்கள் சேவை பணியை பாராட்டி நேற்று காலை 11 மணியளவில் திருவண்ணாமலை உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் ஆர்.விஜயபாஸ்கர், திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.அன்பரசு, திருவண்ணாமலை மாவட்டமக்கள் நண்பர்கள் குழுதுணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் கு.சபரி, ஆசிரியர் ஜெ.ஜான்கிங்ஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இரா. கோபிநாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்களின் சேவை பணியை பாராட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாராட்டு சான்றுகளையும் எழுதுகோலையும் வழங்கி பின் பேசுகையில், திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் 14.11.2023 - 30.11.2023 ,2 17 நாட்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்தாண்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மலைச்சுற்றும் பாதையில் தூய்மை பணியும் மாவட்ட காவல் துறையுடன் இணைந்து பல்வேறு காவல் பாதுகாப்பு பணியும் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து மலையேறும் - பாதையில் பாதுகாப்பு பணியும் மிகச்சிறப்பாக செய்து வந்தீர்கள். இதை நானே பல இடங்களில் நேரில் பார்த்தேன். இப்பணியில் - ஈடுபட்டு வந்த அனைத்து - இளைஞர்களுக்கும் என் இதயபூர்வமான பாராட்டும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினர்கள் சுமார் 25 ஆண்டுகளாக மக்கள் சேவை பணிகளை ஆற்றியதை கண்டு வியக்கின்றேன். ப்ரென்ஸ் ஆப்பிப்பிள் பணியாற்றிய பல இளைஞர்கள் இன்று பலதுறைகளில் உயர் பொறுப்புகளில் சேவையாற்றி வருகிறார்கள். தன்னார்வம் கொண்ட உங்களைப்போல் இளைஞர்களால்தான் அரசுக்குக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி சேவை பணியாற்றுவதில் முதலிடம் பெற்று இருக்கிறீர்கள்.மக்களுக்கு சேவையில் யார் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறார்களோ அவர்களே தலைசிறந்த தலைவர்களாக மிளிருவார்கள்.

அண்ணல் காந்தி மக்கள் பணியே சிறந்த பணி என்று எண்ணி விடுதலை போராட்டத்தில் உழைத்தார்கள். அதனால்தான் அனைத்து மக்களும் போற்றும் விதமாக மகாத்மாகாந்தியடிகள் விளங்கினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேரும் மக்கள்சேவை பணியே அவரை பாரத நாட்டின் பிரதமராக உயர்த்தியது. எனவே மாணவர்கள் இளைஞர்கள் நேரம் கிடைக்கும் போது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் இதுபோல் திருவிழா காலங்களிலும் அவசர காலங்களிலும் சேவை பணியாற்றுவது தங்களுக்கு மனநிறைவு மட்டுமல்ல சமுதாய சீர்த்திருத்தும் பணியும்கூட ஆகும். அதுவே உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். விழாவில் நகர காவல் உதவி ஆய்வாளர்கள் வி.முருகன், கு.ப.முத்து, தலைமை காவலர் எஸ். சிங்காரவேலன், நகர துணை ஒருங்கிணைப்பாளர் த.தட்சிணாமூர்த்தி, பிரவீன், ஜோதி வெங்கடேசன், தேவஜீவ பிரியன், குணா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஆசிரியர் அஜ்மல் முத்தமிழன் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story