மின்சாரம் தாக்கி இளைஞர் படுகாயம் !
வெள்ளியணை காவல்துறை
டிரான்ஸ்பார்மரில் பீஸ் கேரியர் மாற்றும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, பிச்சம்பட்டி அருகே உள்ள கே.பி. தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் விமல்ராஜ் வயது 18. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கேபி தாளப்பட்டி,ஜே ஜே நகர் பகுதியில் உள்ள திருப்பதி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இபி ட்ரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டது. அந்தப் பழுதை நீக்க விமல் ராஜ் அங்கு சென்று உள்ளார். பழுதுக்கான காரணத்தை ஆராய்ந்த போது, பீஸ் கேரியர் மாற்ற வேண்டிய சூழல் உள்ளதை கண்டுபிடித்தார். வழக்கம்போல் பீஸ் கேரியரை மாற்றும் பணிகளை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே விழுந்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் விமல் ராஜ்க்கு உடலில் 76% காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் விமல் ராஜ். மேலும், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.