மணலியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வாலிபர் பலி
மணலியில், கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மணலி சின்னசேக்காடு, கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் எல்லப்பன், 21, டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை, மணலி, பாடசாலை தெருவில், அமைச்சர் உதயநிதி வருகைக்காக தி.மு.க., கொடிகம்பம் நடும் பணிகளில், எல்லப்பன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடிகம்பத்தின் கம்பியின் ஒரு முனை மேலே சென்ற மின்சார கம்பியின் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், கம்பியை பிடித்துக் கொண்டிருந்த எல்லப்பன், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணலி காவல் ஆய்வாளர் சுந்தர் மின்சாரம் தாக்கி இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், உதயநிதி பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
Tags
Next Story