மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் பெரியதுரை என்பவருக்கு சொந்தமான புதிய வீட்டில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்யச் சென்ற ஆனந்த் என்பவர் மீது வீட்டின் மேல் பகுதியில் சென்ற 11 ஆயிரம் கிலோ வாட் கொண்ட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த ஆனந்துடன் பணியாற்றிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Tags

Next Story