அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி
விபத்து
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, பொப்புடி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான நந்தகுமார். இவர் சரக்கு வாகனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான கோபி. இவர்கள் இருவரும் சரக்கு வாகனத்தில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் தொட்டியம் அருகே வரதராஜபுரம் முடுக்கு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோபி, நந்தகுமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே கோபி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஓட்டுநர் நந்தகுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.