ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

உயிரிழந்த சதாசிவம்

ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலியானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தைச் சேர்ந்த கருப்பண்ணன். இவரது மகன் சதாசிவம் (38). இவர் பரமத்திவேலூரில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று காலை வங்கி பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையத்தில் இருந்து திருமல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வி.புதுப்பாளையம் அருகே சென்ற போது புதுப்பாளையம் பிரிவு ரோடு அருகே எதிரே வெல்லம் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ஆட்டோ ஒன்று சதாசிவம் வந்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சதாசிவத்தை மீட்டு அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதாசிவம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சதாசிவம் மீது விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story