இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விபத்தில் இளைஞர் பலி
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டாரஸ் லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் பஸ் கிளீனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே தட்டக்குடி மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் செல்வராஜ் (20). இவா், திருச்சியில் தனியாா் பேருந்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கடையில் சாப்பிட்டு விட்டு, சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி செல்வராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story