விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் இலக்கியத் திருவிழா

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் இலக்கியத் திருவிழாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் இலக்கியத் திருவிழாவின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் இளைஞர் இலக்கியத் திருவிழா 2024 தமிழகம் முழுவதும் பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி மற்றும் சென்னை இலக்கிய திருவிழாவாக ஐந்து மண்டலங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை மண்டலத்தில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு 14.02.2024 மற்றும் 15.02.2024 இரு நாட்கள் இளைஞர் இலக்கிய விழா போட்டிகள் இலக்கிய வினாடி வினா , விவாத மேடை,ஓவியப் போட்டி, இரண்டு நிமிட பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம் உட்பட பல்வேறு தலைப்புகளில் 10 போட்டிகள் நடத்தப்பட்டு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்கள்.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ் த்துறை இணைப் பேராசிரியர் குணசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார், இயற்பியல் துறை தலைவர் முனைவர் சேட்டு, வேதியியல் துறை தலைவர் முனைவர் பூபதி மற்றும் ஆங்கிலத் துறை தலைவர் ஸ்ரீதேவி வாழ்த்துரை வழங்கினார்கள்.

வாசகர் வட்டத் தலைவர் சொக்கநாதன், தமிழ்த் துறை தலைவர் முனைவர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட நூலக அலுவலர் (பொ) காசிம் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன் நன்றியுரை வழங்கினார். முன்னதாக கல்லூரி மாணவர்களின் தப்பாட்டம், நாதஸ்வரம், தவில் கச்சேரி, பரதநாட்டியம், கரகாட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல் எனப் பல்வேறு கலை நிகழ்சசிகள் நடைபெற்றன.

Tags

Next Story