உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை

இளைஞர் மரணம்
அஞ்சலி செலுத்திய ஆட்சியர்
சேலம் மாவட்டம், சங்ககிரி, பச்சக்காடு பகுதியில் உடல் உறுப்புகளை தானம் செய்த உயிரிழந்த கூலித்தொழிலாளியின் உடலுக்கு தமிழகரசின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதையை செலுத்தினார்.
சங்ககிரி, பச்சக்காடு பகுதியைச் சேர்ந்த மணி, மல்லிகா தம்பதியினரின் கடைசி மகன் சந்தோஷ்குமார் (22). இவர் 4ம் வகுப்பு வரை படித்துள்ளார். கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பனைமரத்தில் நேற்று முன்தினம் ஏறி நுங்கு வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மரத்திலிருந்து கீழே விழந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இன்று இறந்து விட்டார்.
இதனையடுத்து அவரது பெற்றோர்க உயிரிழந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். அதனையடுத்து உயிரிழந்த சந்தோஷ்குமாரின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள், உறவினர்கள் ஈரோடு ஆத்மாவில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய கொண்டு சென்றனர். மின் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக அரசின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.


