நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க தினம் அனுசரிப்பு

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க தினம் அனுசரிப்பு நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் சமர்ப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர் ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை கற்று சமுதாயத்திற்கும் பெற்றோருக்கும் உதவிடும் வகையில் செயலாற்ற வலியுறுத்தினார். மேலும் மாணவ மாணவியர் நற்செயல்கள் செய்யப்படும் பொழுது உத்வேகம் மற்றும் புத்துணர்ச்சியுடன் எதிர்காலத்தில் பயணிக்க, தன்னார்வ சமுதாயத் தொண்டுகள் மற்றும் ரத்த தானம் போன்ற செயல்பாடுகள் உதவுவதாக கூறினார்.

இளைஞர் செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை, ஓவியம், வினாடி வினா, மற்றும் திருத்தமான கையெழுத்து போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும், அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் கார்த்திகேயன் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.

Tags

Next Story