பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை !

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை !

குற்றவாளி

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம். தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம். தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் திருப்பூரில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பொழுது தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நான்காண்டுகள் கழித்து வினோத் அந்த பெண்ணை விட்டு விட்டு சென்ற போது கடந்த 28.07.2017 அன்று வினோத்தின் சொந்த ஊரான வருசநாட்டில் உள்ள வீட்டிற்கு வந்து மகேஸ்வரி ஞாயம் கேட்ட பொழுது, அவருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்ட வினோத் செத்துத் போ என்று கூறி அவமானப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஸ்வரி அவர் வீட்டின் முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இத்தகவல் அறிந்து வந்த வருசநாடு காவல்துறையினர் விஷம் அருந்திய மகேஸ்வரியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரி மருத்துவமனையில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வருசநாடு காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்று சாட்சியங்களின் அடிப்படையில் பெண்ணை ஏமாற்றி விட்டு, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வினோத் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்ததோடு, அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் மெய் காவல் சிறை தண்டனையும் அதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து குற்றவாளி வினோத்தை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story