தஞ்சையில் இளந்தளிர் திறன் வளர் சுற்றுலா துவக்கம்

தஞ்சையில் இளந்தளிர் திறன் வளர் சுற்றுலா துவக்கம்
X

தஞ்சையில் இளந்தளிர் திறன் வளர் சுற்றுலா துவக்கம்


தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் தனித் திறன் கொண்டு விளங்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு திறன்வளர் சுற்றுலா சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் தனித் திறன் கொண்டு விளங்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு திறன்வளர் சுற்றுலா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த சுற்றுலாவை தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து தெரிவித்தது: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து 8 வாரம் இளந்தளிர் திறன் வளர் சுற்றுலா முதல் கட்டமாக நடைபெறுகிறது.

கல்வி நிறுவனங்கள், விமானப்படைத்தளம், தொழிற்சாலைகள், கலாசார மையங்கள், விவசாயம், கால்நடை பண்ணை, தஞ்சாவூர் அருங்காட்சியகம், அறிவியல் பூங்கா மற்றும் வரலாற்று முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்ப டுகின்றனர். இதில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் திறன்வளர் சுற்றுலா முடிந்த பின் தனித் தனியாக அறிக்கை ஒன்று தயாரித்து வழங்க வேண்டும் என்றார்.

ஆட்சியர். தஞ்சாவூர் நகரம் மற்றும் தஞ்சாவூர் ஊரகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்கள் தஞ்சாவூர் அருங்காட்சியகம், தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், அறிவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தனர். நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ், சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story