இளைஞர் தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
காவல் நிலையம்
தர்மபுரியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட டேக்கிஷ்பேட்டை பாபா தெருவை சேர்ந்தவர் பிரபு இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி செவ்வந்தி. கடந்த சில நாட் களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய பிரபுவுக்கு காலில் உள்ள 4 விரல்கள் அகற்றப்பட்டது. இதனால் அவர் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனை அடுத்து தகவல் அறிந்த தர்மபுரி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story